ගැටුම් හදුනාගැනීම සහ ගැටුම් නිරාකරණය කිරීම වැනි ප්රජා සාමය පවත්වාගැනීමේ ක්රමෝපායයන් පිළිබද දැනුම වර්ධනය කිරීමේ වැඩමුළු මාලාවෙන් පසු දියත් වූ කුසලතා වර්ධනය කිරීමේ වැඩමුළු සාර්ථකව අවසන් විය. අම්පාර, වවුනියාව, කුරුණෑගල සහ ගාල්ල යන දිස්ත්රික් හතර ඉලක්ක කරගත් වැඩසටහන්, මාර්තු 12,13,19 සහ 20 දින වල, සූම් (Zoom) මාධ්යය ඔස්සේ පවත්වන්නට යෙදුණි.
සමාජය පිළිබද දැනුවත් භාවය සහ නුහුරු වාතාවරණයන් වලට මුහුණ දෙන ආකාරය ප්රජා නායකයින්ට පුහුණු කිරීම සඳහා දියත් වූ වැඩසටහන් මාලාව තුළ අනෙනොන්ය සංස්කෘතික හරයන් හඳුනාගැනීම සහ ඒවාට ගරුකළ යුතු ආකාරය මෙන්ම අන්ය සංස්කෘතීන් සමග සාර්ථක සබඳතාවයක් පවත්වාගෙන යන ආකාරය ඉදිරිපත් කරන ලදී. විවිධ ආගමික, සංස්කෘතික සහ ආර්ථික පසුබිම් වලින් එන පුද්ගලයින් ගේ එකිනෙකට වෙනස් හැකියාවන් සහ සීමාවන් හඳුනාගනිමින්, ඔවුන්ගේ උපරිම දායකත්වය ප්රජා කටයුතු වලට ලබාගැනීම මෙහිදී සහභාගික ප්රජා නායකයින්ට හඳුන්වා දෙන ලදී. ඕනෑම ප්රජා කටයුත්තක් ආරම්භයේදී පොදුවේ පිළිගත හැකි ප්රතිපත්ති රාමුවක් සහ හර පද්ධතියක් සකස් කරගැනීමේ වැදගත්කම මෙහිදී අවධාරණය කෙරුණි.
වැඩසටහන් මාලාව තුළින් වර්ධනය කළ කුසලතාවයන් ප්රායෝගිකව භාවිතා කිරීමේ අවස්තාවක් ලෙස සියළු ආගම් වල නියෝජිතයින්ගේ සහභාගිත්වයෙන් ආගමික සහ සංස්කෘතික උත්සවයන් ඉදිරියේදී සංවිධානය කිරීම යෝජනා කෙරුණි. සුදුසු උත්සව සැමරුම් තෝරාගැනීමේ සිට ඒවාට අදාළ ක්රියාකාරකම් තීරණය කිරීම, ක්රියාකාරකම් සදහා සුදුසු ස්ථාන තෝරාගැනීම සහ සියළු ආගමික, සංස්කෘතික ප්රජාවන්ගේ ක්රියාකාරී සහයෝගය ලබාගැනීම ආදී සමස්ත ක්රියාවලිය සංවිධානය කරගැනීම සඳහා අවශ්ය වන මගපෙන්වීම කුසලතා වර්ධන වැඩමුළු මාලාව තුලින් දියත්වුණි.
වැඩසටහන් මාලාව වෙත සැප්රි සභාපතිනි, ජනාධිපතිනි චන්ද්රිකා බන්ඩාරනායක කුමාරතුංග මැතිණිය ද සම්බන්ධ වූ අතර, මන්ත්රීවරියන් සහ ප්රජා නියෝජිතයන් තම ප්රජා සේවාවන් තුළදී මුහුණ දෙන ගැටළු පිළිබදව එතුමිය හා අදහස් හුවමාරු කරගැනීම කැපී පෙනුනි.
පළාත් පාලන ආයතන නියෝජිතවරියන් ගේ සහ ප්රජා නායකයින්ගේ නායකත්ව මෙන්ම සංවිධාන හැකියාවන් ඔප්නැංවීම ඉලක්ක කරගත් එම වැඩසටහන් මාලාව, දැනුවත්භාවය වර්ධනය කිරීමේ වැඩසටහන් වලදී බෙදාදුන් දැනුම තව දුරටත් ඉදිරියට ගෙනයන ආකාරයෙන් සකස් කර තිබීම විශේෂත්වයකි.
***********************************************************************************
இணக்கப்பாட்டை அடைந்துக்கொள்வதற்கான இயலுமை விருத்தி செயலமர்வு மற்றுமொரு மைல்கல்லை தாண்டி முன்னோக்கி…
முரண்பாட்டை அடையாளம் கொண்டு கொள்ளுதல் மற்றும் முரண்பாட்டை தீர்த்துவைத்தல் போன்ற சமூகத்தில் சமாதானத்தை நிலைபெற செய்தல் நடவடிக்கைகள் தொடர்பான அறிவு விருத்தி செயலமர்வு நிகழ்ச்சிகளின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட இயலுமை விருத்தி செயலமர்வுகள் வெற்றிகரமாக நிறைவுப்பெற்றன. வவுனியா, அம்பாறை, குருணாகலை மற்றும் காலி ஆகிய நான்கு மாவட்டங்களை இலக்காக கொண்டு செயலமர்வுகள் மார்ச் 12,13,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சூம் (Zoom) ஊடகத்தின் மூலமாக இடம்பெற்றன.
சமூகம் தொடர்பான அறிவை விருத்தி செய்தல் மற்றும் அசாதாரணமான நிலைமைகளுக்கு முகம் கொடுக்கும் விதங்களை சமூக தலைவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு தொடரில், இதர கலாச்சரங்களின் உள்ளடக்கங்களை எவ்வாறு அறிந்துக்கொள்வது தொடர்பாகவும், அது தொடர்பாக எவ்வாறு இசைவாக்கம் அடைந்துக்கொள்வது மற்றும் இதர கலாச்சரங்களுடன் சிறந்த தொடர்புகளை பேணிக்கொள்வது தொடர்பாகவும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பல்வேறு சமய, காலாச்சார மற்றும் பொருளாதார பிண்ணனியை கொண்ட நபர்களின் திறமைகளையும், வரையறைகளையும் அறிந்துக்கொள்ளுதல், சமூக செயற்பாடுகளில் அவர்களின் உச்சக்கட்ட பங்களிப்பை பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சமூக தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டன. அத்துடன், யாதேனும் ஒரு சமூக செயற்பாடு ஆரம்பிக்கப்படும் போது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய கொள்கைகள் மற்றும் உரிய கட்டமைப்பை உருவாக்கிக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
செயலமர்வின் ஊடாக விருத்திசெய்துக்கொண்;ட திறன்களை நடைமுறைப்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் பொருட்டு அனைத்து சமய பிரதிநிதிகளினதும் பங்குபற்றலுடன் எதிர்காலத்தில் சமய, காலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது. பொருத்தமான நிகழ்வுகளை தெரிவுசெய்துக்கொள்வது முதல் அவற்றுக்கான செயற்பாடுகளை தீர்மானித்துக்கொள்வது, செயற்பாடுகளுக்கான பொருத்தமான இடங்களை தெரிவுசெய்துக்கொள்வது மற்றும் அனைத்து சமய, காலாச்சார பிரிவினரதும் ஊக்கமான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது போன்ற அனைத்து விடயங்களையும் ஏற்பாடு செய்துக்கொள்வதற்கு தேவையான வழிக்காட்டல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி இந்த செயலமர்வு தொடரில் வழங்கப்பட்டது.
இந்த திறன் அபிவிருத்தி செயலமர்வு தொடருக்கு சப்றி நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்களும் பங்குபற்றியதுடன் சமூக கடமைகளை நிறைவேற்றும் போது சமூக தலைவர்கள் மற்றும் பெண் அரசியல் பிரதிநிதிகள் முகம்கொடுக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி அவரின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.
உள்ளுர் ஆட்சி பெண் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக தலைவர்கள் ஆகியோரின் தலைமைத்துவ பண்புகளையும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் திறன் மேம்பாட்டையும் அடிப்படையாக கொண்ட இந்த செயலமர்வு தொடரானது அறிவு விருத்தி செயற்திட்டத்தில் வழங்கப்பட்ட அறிவினை முன்னோக்கி நடைமுறைப்படுத்தும் விதமாக திட்டமிடப்பட்டிருந்தமை மிகவும் விசேடத்துவமிக்கதாகும்.
No comments:
Post a Comment