தென் ஆசியக் கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவகத்தின்; (ளுயுPசுஐ) உள்ளுராட்சி பெண் உறுப்பினர்களை
வலுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதி நிகழ்வானது 24.05.2019 அன்று கொழும்பு, வவுனியா, கம்பாஹ, அம்பாறை ஆகிய மாவட்டங்களை
சேர்ந்த உள்@ராட்சி பெண் உறுப்பினர்களின்
பங்குபற்றலுடன்; இடம்பெற்றது. அதன்போது, அடுத்த கட்ட நடவடிக்கைகள்
தொடர்பான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன. அதன் பிரகாரம் கொழும்பு மாவட்ட உள்ளுராட்சி பெண் உறுப்பினர்களினால் கொலன்னாவ பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட
செயற்திட்டமானது முதன்மையானதாக அமைந்திருந்தது. இந் நிகழ்ச்சித் திட்டமானது
நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் உதவியுடன்
நடைமுறைப்படுத்துகின்றது.
குறிப்பிட்ட செயற்திட்டமானது 01.06.2019 அன்று கொலன்னாவ பிரதேசத்தில் கொலன்னாவ உள்ளுராட்சி பெண் உறுப்பினர்களினால் கௌரவ உறுப்பினர் கங்கானி உசான்தி பெரேராவின்
தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உண்மையில், வெறும் ஏழு நாட்களில் இதனை ஏற்பாடு செய்திருந்;தமை மிகவும் குறிப்பிடதக்க விடயமாகும்.
கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசியல்
கட்சிகளின் 11 உள்ளுராட்சி பெண் உறுப்பினர்களின் இந் நிகழ்வில் பங்குகொண்டனர். அவர்கள் கொழும்பு
மற்றும் தெஹிவளை மாநகர சபைகள் மற்றும் கொலன்னாவ பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தனர்;. கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த உள்ளுராட்சி ஆண் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டதுடன், கொலன்னாவ சமூக பிரதிநிதிகளும்
முக்கிய பங்குபற்றுனர்களாக அமர்ந்து இருந்தனர்.
இந் நிகழ்வின் கருப்பொருளானது “தேசிய பாதுகாப்பும், நல்லிணக்கமும்” ஆகும்.
அனைத்து சமய பெரியார்களினதும் இறைவணக்கத்துடன்
நிகழ்வானது ஆரம்பமானது. பௌத்த மத பிக்குவினால் ‘செத் பிரித்’
ஓதப்பட்டதுடன் அதனை தொடர்ந்து இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவ சமயங்களின் இறைவணக்கம் செலுத்தப்பட்டது. பௌத்த மத பிக்குவினால் ஒரு
சொற்பொழிவும் மேற்க்கொள்ளப்பட்டது.
நிகழ்வின் பிரதான உரையானது முன்னாள் இராணுவ தளபதி
தயா ரத்நாயக்கவினால் பல்லின சமூகமும், பல சமயங்களும் உடைய எமது
நாட்டில் இன ஒற்றுமையை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் தொடர்பாக
அமைந்திருந்தது.
சமூக பிரதிநிதிகளுக்கு இது தொடர்பாக தங்களது
கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன், அவர்கள் நல்லிணக்கத்தின் அனுகூலங்கள் தொடர்பாக சிறப்பாக தங்களது கருத்துக்களை
முன்வைத்ததுடன் செயற்திட்டங்கள் மூலம் அவ்வாறான ஒற்றுமையும், நல்லிணக்கமும்
பேணப்படவேண்டும் என்று தெரிவித்தனர்.
நிகழ்வின் இறுதியில் அனைவரும் இணைந்து தேசிய கீதத்தை
பாடினார்கள்.
இறுதி உரையில் கொலன்னாவ பிரதேச உறுப்பினரும் இந்
நிகழ்வின் பிரதான ஏற்பாட்டாளருமான கங்கானி உசான்தி பெரேரா குறிப்பிடும் போது “தேசிய பாதுகாப்பும், நல்லிணக்கமும்” எனும் தொனிப்பொருளில்
இடம்பெற்ற இந் நிகழ்வில் பங்குபற்றிய எனது சக பெண் உறுப்பினர்களுக்கு எனது கௌரவமான
நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இவ்வாறான ஒரு நிகழ்வை ஏற்பாடு
செய்வதற்கு தேவையான அறிவையும், இயலுமையையும் பெற்று
தந்தமை தொடர்பில் திருமதி கீதா டி சில்வா மற்றும் தென் ஆசியக் கொள்கை மற்றும்
ஆராய்ச்சி நிறுவகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் எமது நன்றிகள்.”என குறிப்பிட்டார்.
இந் நிகழ்வானது காலத்திற்கு ஏற்ற
முக்கியமானதொன்றாகும். கடந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள சமூக
முரண்பாடுகளின் அடிப்படையில் மேற்படி நிகழ்வானது உள்ளுராட்சி பெண் உறுப்பினர்களால் நடாத்தப்பட்டது.
2018 உள்ளுராட்சி தேர்தலின் மூலமாக 25மூ ஒதுக்கீடு மூலமாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமூகத்தின் அடிமட்ட பெண்
உறுப்பினர்கள் இவ்வாறான முக்கியமான விடயம் தொடர்பில் தங்களை வெளிக்கொண்டு
வந்துள்ளனர்.
மேலும், அரசியல் வேறுபாடுகளை
தவிர்த்து பெண் என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தி மாவட்டத்தை சேர்ந்த
அனைத்து உள்ளுராட்சி பெண் உறுப்பினர்கள் மற்றும்
கொலன்னாவ பிரதேச பெண் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து இந் நிகழ்வினை
நடாத்தியமை ஒரு மைல்கல்லாக குறிப்பிடலாம்.
No comments:
Post a Comment